பல ஆண்டுகள் கனவு நிறைவு : கிராம மக்கள் மகிழ்ச்சி தொட்டமஞ்சி என்னும்மலை கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கம்!
ஓசூர் அருகே பல ஆண்டுகள் கனவு நிறைவேறியது!!
 கிராம மக்கள் மகிழ்ச்சி தொட்ட மஞ்சி என்னும்மலை கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி வட்டம் அஞ்செட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தொட்ட மஞ்சி எனும் மலை கிராமம் இந்த கிராமத்தில்  அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இருக்கும் இந்த நிலையில் 15 கிலோ மீட்டர் கடந்து  அஞ்செட்டிக்கு வரவேண்டிய இந்த நிலையில்  அவர்களுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை என்கிற காரணத்தினால்   கடந்த சில வருடங்களாக  நடந்தே அஞ்செட்டிக்கு வந்து செல்கின்றனர் ..இதனால் பெரும் அவதிக்கு இன்னலாகி வந்த கிராம மக்கள்  தமிழக அரசு அவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய வை. பிரகாஷ் எம்எல்ஏ அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் மகளிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அவர்களின் நல்லாட்சியில் விடியல் பயணம் மகளிர்க்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம் திட்டத்தின் கீழ்  தேன்கனிக்கோட்டை பணிமனையில் இருந்து அஞ்செட்டி முதல் மஞ்சிமலை வரை பேருந்து இயக்கப்பட்டது இதன் தொடக்க விழா 13-03-2024 புதன் அன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஓசூர் துணை சார் ஆட்சியர் ,ஓசூர் போக்குவரத்து கோட்ட மேலாளர் ,திமுக தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி.மாவட்ட செயற்குழு கிரிஷ், ஒன்றிய செயலாளர் தனிக்காசலம் என்கிற ராஜா.கங்கப்பா,ஒன்றிய செயலாளர். ராஜா. திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கிரீஸ்.ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரத்தினம். ,கவுன்சிலர்.வெங்கடேஷ், சண்முகம். கிளை செயலாளர் DRV சந்திரன்,மேஸ்திரி சீனிவாசன் ,காதர் பாஷா மற்றும் ராஜசேகர். உள்ளிட்ட அப்பகுதி கிராம மக்கள் பலர்  கலந்து கொண்டனர்.