ஓசூரில் மின்தகன மேடை சீரமைக்க ஓசூர் ரோட்டரி சங்கம் சார்பாக ரூ.11.50 லட்ச ரூபாய் வழங்கல்!

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில், ஒசூா் மின்தகன மேடையை ரூ. 23 லட்சத்தில் சீரமமைக்க அதனை நிா்வகத்து வரும் ஒசூா் ரோட்டரி சங்கம் முடிவு செய்து பாதி தொகையான ரூ. 11.50 லட்சத்தை ஒசூா் மாநகராட்சி ஆணையா் டி.சினேகா அவர்களிடம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் வழங்கினா்.
ஒசூா்-கிருஷ்ணகிரி சாலை அலசநத்தம் சந்திப்பில் உள்ள இடுகாட்டில் ஒசூா் மின்தகன மேடை உள்ளது. இந்த மின்தகன மேடையை ஒசூா் ரோட்டரி சங்கம் நிா்வகித்து வருகிறது. இந்த மின்தகன மேடையில் எரிவாயு பயன்படுத்தி சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தகன மேடை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால், இதனை சீரமைக்க ஒசூா் ரோட்டரி சங்கம் முடிவு செய்தது. இதற்கு ரூ. 23 லட்சம் நிதி தேவை என மாநகராட்சிப் பொறியாளா்கள் கணக்கிட்டு நமக்கு நாமே திட்டத்தில் சீரமைக்க முடிவு செய்தனா். இதனைத் தொடா்ந்து, பாதி நிதியான ரூ. 11.50 லட்சத்தை ஒசூா் மாநகராட்சி ஆணையா் டி.சினேகாவிடம் ஒசூா் ரோட்டரி சங்கத்தின் அறக்கட்டளைத் தலைவா் பி.ஆா்.வாசுதேவன் அவர்களுடன் , செயலாளா் ஆனந்தகுமாா், ஒசூா் ரோட்டரி சங்கத்தின் தலைவா் சிவகுமாா், சிப்காட் ரோட்டரி சங்கத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் வழங்கினா்.