வீட்டின் சொத்து வரி போட ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வரி வசூலிப்பாளர் கைது

தரமணியில் வீட்டிற்கு சொத்து வரி போட 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் கையும் களவுமாக கைது.!

சென்னை தரமணி எம்.ஜி.ஆர்.நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் தீபா. இவர் தனது ஓடு வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றியுள்ளார். 
இதையடுத்து வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வரி வசூலிப்பவர் சரவணன் என்பவர் அணுகியுள்ளார். அதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். 

லஞ்சம் தர விரும்பம் இல்லாத தீபா ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவியே ரூபாய் நோட்டுகளை தீபாவிடம் கொடுத்து அனுப்பினர். வரி வசூலிப்பாளர் சரவணனிடம் முதலில் ரசாயனம் கலந்த ரூ.10 ஆயிரம் பணத்தை தந்தார். 

உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். லஞ்சம் வாங்கிய சரவணனை கைது செய்த போலீசார் அவரது அலுவலகம் முழுவதையும் சோதனை செய்தனர். பிறகு வழக்குப் பதிந்து கைதுசெய்யப்பட்ட சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.