வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேனூர் ஊராட்சி, வஞ்சூர் கொள்ளைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆதி இவர் கார்பெண்டராக பணியாற்றி வருகின்றார். ஆதி என்பவருக்கு அபி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு வருடமாகியுள்ளது. இந்த நிலையில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு மகப்பேறு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அபி என்ற பெண்மணிக்கு கருத்தரித்து குழந்தை சிகிச்சை பத்தாவது மாதம் வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்த்து கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர். கடந்த 11.2.2024 ஞாயிற்றுக்கிழமையன்று அபி என்ற பெண்மணிக்கு பிரசவ வலி அதிகரித்ததின் காரணத்தால் சேனூரிலிருந்து உடனடியாக வேலூர் பெண்ட்லண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க வந்துள்ளனர்.
வஞ்சூர் கொள்ளைமேடு கார்பெண்டர் ஆதி என்பரின் மனைவி அபி பிரசவம் பார்க்க ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 12:30 மணியளவில் வந்த பெண்ட்லேண்ட் மருத்தமனையில் பிரசவ மருத்துவர்கள் இல்லை என தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அலட்சியமாக எடுத்து கொண்ட பெண்ட்லேன்ட் மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர் குமரேசன் (ORTHO). நானே பிரசவம் பார்க்கிறேன் என்று குறி அபி (வயது 19) என்ற கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்துள்ளார். மகப்பேறு குழந்தை பிரசவ பார்க்கும் மருத்துவர் தற்போது இல்லாத காரணத்தால் இங்கு நாம் ஏதும் செய்ய வேண்டாம் உடனடியாக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விடலாம் என்று இங்கு பணியாற்றும் பணியாளர்கள் பலமுறை சொல்லியும் ஆர்த்தோ மருத்துவர் ஏற்றுக்கொள்ளாமல், அவரே பிரசவம் பார்த்து தாமதமானதால் அதே நேரத்தில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரவைத்து வேலூர் தலைமை மருத்துவமனையான அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அடக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்ததும் மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து பரிசோதித்தபோது, குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆண் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் தாய் அபி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மருத்துவத்துறையில் இது போன்ற அலட்சியப்போக்கால் பல உயிர்கள் பரிதாபமாக பறிபோவது அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலட்சுமி ஐஏஎஸ் அவர்கள். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பென்ட்லாண்ட் மருத்துவமனையில் உரிய நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததும், பெண்ட்லேன்ட் முதன்மை, தலைமை மருத்துவ அலுவலர் அனிதா மீதும், அலட்சியமாக எலும்பு டாக்டர், பிரசவ மருத்துவம் பார்த்த மருத்துவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.