பாலாற்றில் நடுராத்திரியில் 50 மாட்டு வண்டிகளில் எந்த அச்சமின்றி மணல் கடத்தல் கண்டுகொள்ளாத..?. வருவாய்த்துறை - போலீஸ்..!!
வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா டோல்கேட் அருகே கந்தனேரி பகுதியில் அள்ள. அள்ள குறையாதது பாலாற்றில் கனிமவள மணல்கள் அத்தகைய வகையில் அரசு குவாரி அமைத்து ‌லாரிகளுக்கு டோக்கன் வாங்கியும் 2 யூனிட் 3 யூனிட் 4 யூனிட் 5 யூனிட் என கணக்குகளில் டிப்பர். டிப்பராக அல்லி சென்ற நிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது. தமிழகத்தில் 12 மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணைக்கு  ஒத்துழைக்குமாறு சம்மன் அனுப்பியும். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியாளருக்கு கடந்த மாதத்திற்கு முன்பு சம்மன் அனுப்பியுள்ள நிலையில். கந்தனேரி பாலாற்றில் கனிமவள மணல் அள்ளுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழக நீர்வளத் துறையை சார்ந்த மேல்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ளனர். 

இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் மணல் குவாரிகள் என்றெல்லாம் பேர் போன புதுக்கோட்டை கம்பெனியின் உரிமையாளர்கள் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் குறித்து நம் அறிந்த விஷயம் தான்.
இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்குட்பட்ட பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக 50 மாட்டு வண்டிகளை கொண்டு நடுராத்திரியில் பிரம்மபுரம் கிராமத்திற்கு உள்ளடங்கிய பாலாற்றில் கனிமவள மணல்களை கொள்ளை அடித்து டிப்பர் லாரிகளுக்கு கைமாற்றி பெரும் தொகையைப் பார்த்து வருகிறார். இதில் கிராம நிர்வாக அதிகாரி முதல் மாவட்ட வருவாய் அதிகாரிகள் வரை லஞ்சம் லாவண்யம் பெற்றுக்கொண்டு யாரும் கண்டும் கொள்ளாமல் அவர்கள் வேலையை பார்த்து வருகின்றனர். இது சம்பந்தமாக பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த தன் பெயரைக் கூறிக் கொள்ள விரும்பாத நபர் ஒருவர் கூறுகையில் நடுராத்திரியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ‌மாட்டுவண்டியில் கனிமவள மணல்களை கொள்ளையடித்து செல்லும் பொழுது மாட்டு வண்டி அசைபோடும் சத்தம் கேட்டு கண் விழித்து கொள்கின்றோம். இது சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரி முதல் மாவட்ட மேல்மட்ட அதிகாரிகள் வரை புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை இது ஒரு புறம் இருந்தாலும் காவல்துறையிடமும் பலமுறை தொலைபேசி மூலமும் தகவல் கொடுத்து விட்டோம் அவர்களும் எந்த நடவடிக்கை எடுத்த பாடும் இல்லை என்று ‌தெரிவித்தார். இது சம்பந்தமாக நமது நிருபர் குழு விசாரணையில் இறங்கிய பொழுது ‌நடுராத்திரியில் பிரம்மபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் சுமார் 8 ஆண்டுகளாக பாலாற்றிலிருந்து மணல் கடத்தி வியாபாரம் செய்து வருவதாகவும் அவரிடம் தினக்கூலிக்கு 50 நபர்கள் பணி புரிந்து வருவதாகவும் இவர்கள் நடுராத்திரியானதும் பிரம்மபுரம் வழியாக பாலாற்றில் இறங்கி 50 மாட்டு வண்டிகளில் ஒரு வண்டிக்கு என 2 யூனிட் அளவுக்கான மணலை கடத்தி வந்து ஆனந்தன் கூறும் இடத்தில் கொட்டி விடுகின்றனர். இச்சம்பவம் குறித்து நடுராத்திரியில் நமது நிருபர் குழு வீடியோவாக பதிவு செய்து விஏஓ முதல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வரை வீடியோ ஆதாரங்களை அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..?., இது சம்பந்தமாக அதே பிரம்மபுரத்தை சேர்ந்த எந்த பத்திரிகையில் பணிபுரிகிறார் என்பதை தான் கூறிக் கொள்ளாத விஜய் (என்கின்ற) விஜயகுமார் தன்னை ஒரு ரிப்போர்ட்டராக கூறிக்கொண்டு வீடியோ ஆதாரங்களை திரட்டி அதிகாரிகளுக்கு அனுப்பிய நமது செய்தியாளர்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பிரம்மபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் உங்களிடம் பேரம் பேசச் சொன்னார். பேரத்திற்கு அடிப்படையாமல் ஆதாரங்களை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கூறியதால் பேரம் பேச வந்த நபர். நமது செய்தியாளர்களை மிரட்டல் விடுவது போல் பேசி வரும் நபரையும் மணல் மாஃபியா ஆனந்தனையும் அதற்கு உதவிகரமாக இருந்து வரும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசாரும் கையூட்டு பெற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை காட்டி வரும் அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்..‌ வேலூரில் புதியதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றிருக்கும் சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் விசாரணை செய்யும்படி உத்தரவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், தமிழக‌ நீர்வளத்துறை மூத்த அமைச்சருமான துரைமுருகன் அவர்களின் சொந்த தொகுதியிலே மணல் மாஃபியா ஆனந்தன் என்பவர் அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு மணல் கொள்ளை அடித்து வருவது சட்டவிரோதமான செயலாகும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாகவே உயர் நீதிமன்ற நீதிபதிகளும் சமீபகாலமாக மணல் கொள்ளையடிப்பவர்களை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து பிணையில் வெளி வராதபடி வழக்குப் பதிந்து காப்புமாட்டி சிறையில் அடைக்க வேண்டும் என்பதையெல்லாம் நீதிபதிகள் அவ்வபோது உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டுதான் உள்ளனர். அதையும் தாண்டி மணல் மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதை தவிர்த்தப்பாடு இல்லை என்கின்றனர். சமூக ஆர்வலர்கள்.. எனவே இனியும் தாமதிக்காமல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வரும் மணல் மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சட்டமும் பாய்ந்தால் இதுபோன்ற மணல் கடத்தல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது குறையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்..