கே.வி.குப்பம் சார்பதிவாளர் கவிதாவின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
வேலூர் மாவட்டம்: கே.வி.குப்பம் சார்பதிவாளர் கவிதா என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!? கே.வி.குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார். வழக்குப்பதிவுச் செய்து விசாரணை!
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் கவிதா என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் தாலுகா, சக்தி மாரியம்மன் கோயில் தெரு, பழைய அருந்ததியர் காலனி, கீழ்கவசம் பட்டு, கே.வி. குப்பத்தைச் சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் ரமேஷ். இவர்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். 

இவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தனர்.
கீதா -ரமேஷ் தம்பதியர் கொடுத்த புகார் மனு விசாரணைக்காக குடியாத்தம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் கே. வி. குப்பம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-
கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்தவும் வழக்குப் பதிவு செய்யவும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பேரில் கே. வி. குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார். கே.வி. குப்பம் சார் பதிவாளர் கவிதாவின் மீது SC/ST ACT வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே பத்திரப்பதிவுத்துறை நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவார்களா.? அல்லது பணி நீக்கம் செய்யப்படுவாரா.?!. என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.