நகை கொள்ளையனை சிறப்பாக செயல்பட்டு பிடித்த நெல்லை சேரன்மகாதேவி தனிப்படையினர். எஸ்.பி பாராட்டு.!!
• Bharathaidhazh
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம். முன்னீர் பள்ளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தெற்கு பொன்னாக்குடி கிராமத்தில் 31-12-23 தேதியன்று இரவு வீட்டில் அனைவரும் சர்ச்சுக்கு சென்று திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜ், மேற்பார்வையில் தனிப்படை குழுப் போலீசார் பிரேம்குமார், எஸ்.ஐ, முத்துராமலிங்கம், சரவணன், உமாரத்தினன், விஜயக்குமார் ,சண்முகராஜ் ஆகியோர் கொண்ட போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தியதில் மருதகுளம் மூன்றடைப்பு. Ps limited ஐ ஊரை சேர்ந்த தங்கராஜ் எபினேசர். (30) S/o. ஈசாக் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து கேரளாவில் உள்ள Kanjiramattom என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து அவனிடமிருந்து 102 கிராம் தங்கம், ரூ.160000 ரொக்க பணத்தை கைப்பற்றி போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்டம், சைபர் கிரைம் போலீஸ் சுரேஷ் ,பாலா, காளீஸ்வர மூர்த்தி ஆகியோர் உதவிகரமாக இருந்துள்ளார்கள். மேலும் குற்றவாளிக்கு பெரம்பலூர் ps cr.no.719/2019 u/s .457,380 IPC முன் வழக்கு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படை குழுவினரை மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன், சேரன்மகாதேவி உட்கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினார்கள்.