வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் தற்போது புதியதாக சென்னையில் இருந்து நேரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு சார்- பதிவாளராக வந்துள்ளார் முத்து அழகேசன். இவரது சொந்த ஊர் திருவண்ணமலை மாவட்டம். இவர் வந்து சில நாட்களே ஆன நிலையில் ஜெயராமன் என்னும் இடைத்தரகரை தனது கையில் வைத்துக் கொண்டு தீவிர லஞ்ச வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. பொதுமக்கள் ரத்தத்தை இவர் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி எடுத்து விடுகிறார். இவர் ஏற்கனவே பதவி ஏற்ற நாளன்று இந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் எத்தனை இடைத்தரகர்கள் இருக்கின்றனர் என அங்கு இருந்தவர்களிடம் கேட்டுள்ளார். அத்துடன் அவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் என்னை வந்து தனித்தனியாக பார்க்க வேண்டும் என கட்டளையிட்டு உள்ளார் . பத்திரப் பதிவுத் துறையில் இருந்து நான் நேரடியாக வந்துள்ளேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என கொஞ்சம் கூட பயமில்லாமல் கொக்கரித்துள்ளார். இவரால் அரசுக்கு பேரிழப்பு ஏற்படும் வகையில் தவறான சில தில்லாலங்கடி வேலைகளை செய்து சில நாட்களிலேயே பிரபலம் ஆகி விட்டார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. பொதுமக்களுக்கு இவரது நடத்தையால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதை மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இவருடைய ஒரே குறிக்கோள் பணம் பணம். பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. அதாவது முடிக்க முடியாத, நடக்க கூடாத வேலையை கூட நடத்தி தருவதில் வல்லமை மிக்கவர் என்பது அனைவரும் உணரும் வகையில் நடந்து கொள்கிறார். இது அனைவரும் நன்கு அறிந்த உண்மை. இவருக்கு பக்க பலமாக இருப்பவர் இடைத்தரகர் ஆள் இன் ஆல் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குடியாத்தம் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். படிப்பறிவு இல்லாத இந்த நபரை வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலைகளை தைரியமாக செய்து வருகிறார். பத்திர பதிவுக்கு அவர் நிர்ணயிக்கும் தொகைதான். யாரும் இவரை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அந்த பதிவு இழுபறியாக மாற்றி அலைகழிக்க செய்து விடுகிறார் இந்த பலே கில்லாடி. இவரிடம் பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேலை? என கேட்டால் உடனே சார்-பதிவாளர் உங்கள் பத்திரத்தை பதிவு செய்ய முடியாது. ஜெயராமன் என்னுடைய வலது கை, நீ வெளியே போ என்று மிரட்டும் அவல நிலை நிலவ தொடங்கி விட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவரை தீவிரமாக கண்காணித்து இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது போன்று சில சார்-பதிவாளர்கள் தைரியமாக தவறு செய்து லஞ்ச பணத்தை வாரி சுருட்டி வருகின்றனர் பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்-பதிவாளர் கள். இவர் போல் செயல்படும் நபர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பணிக்கு வந்ததும் கைநீட்டும் செயலில் ஈடுபட்டுள்ள குடியாத்தம் சார்-பதிவாளர் முத்து அழகேசன்!
• Bharathaidhazh