வாலாஜா நகராட்சியில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் : பாஜகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் முதல் நகராட்சியான  வாலாஜா நகராட்சியில் பல்வேறு ஊழல் முறைகேடுகள்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயை ஊழலில் முதலிடத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து 
நகர பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது. இதில் நகரத்தலைவர் சரவணன்ஜி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் விஜயன்ஜி கலந்துக் கொண்டு கண்டனம் தெரிவித்து பேசியதாவது: பயன்படாத நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் நிலை, சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பற்றி கவலைப்படாத நகராட்சியின் நிலை. தெருநாய்களை கட்டுப்படுத்தாத நிலை குறித்தும், மத்திய அரசு ஒன்றரை கோடி ரூபாய் நகர சுகாதார நிலையம் அமைக்க கொடுத்த நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பக்கூடிய நிலையில் உள்ள
அவலநிலை குறித்து பேசினார்.
ராணிப்பேட்டை சட்டமன்ற பொறுப்பாளரும், கவுன்சிலருமான சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர்கள் ரகுநாத், சீனிவாசன், எழில்குமார்,
மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜே.சுரேஷ்குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாவட்ட செயலாளர் சத்திஷ்குமார், அரசு தொடர்பு பிரிவு
மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்ற
துணை பொறுப்பாளர் சஞ்சய் லோகேஷ், மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் முத்தரசு, இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் ஹரிஷ்மேனன்,
நகர பொதுச்செயலாளர் உமாபதி,
ஜெகன், மகளிர் அணியினர்,
நகர நிர்வாகிகள், அணிபிரிவு
நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகர பொதுச் செயலாளர் ஜெகன் நன்றி கூறினார்.