உசிலம்பட்டியில்: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற - பெண் விஏஓ கைது!
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துபேயத்தேவர். இவருக்கு சொந்தமான 34 சென்ட் இடம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் உள்ளது. இந்த இடத்தை இவருடைய மகன் காசி மாயன் பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் நேரில் சென்று போத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் விஏஓ ரம்யாவிடம் அணுகியுள்ளார். பின்னர் விஏஓ ரம்யா பட்டா மாறுதலுக்கு ரூ. 9.ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத முத்துபேயத்தேவர். மதுரை மாவட்ட லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் டிஎஸ்பி சத்தியசீலன் அறிவுறுத்தலின்படி ரூ. 9ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர். அதையெடுத்து விஏஓ ரம்யா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் ஆம்புஜெயராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் விஏஓ ரம்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பெயரில் சிறையில் அடைக்க உள்ளனர்.