சாலைவிதிகளை மதித்து
வாகனங்களை ஓட்டவேண்டும்
மாணவிகளுக்கு ஆட்சியர் வளர்மதி அறிவுரை வாலாஜா அரசுக்கல்லூரியில் நடைபெற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவிகளுக்கு மாவட்ட வளர்மதி விதிகளை மதித்து
வாகனங்களை ஓட்டவேண்டு
மென்று அறிவுரைவழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம். வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாநில
நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது . இக்கருதரங்கிற்கு மாவட்டகோட்டப் பொறியாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வரவேற்புறை ஆற்றினார்
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இ.கா.ப., வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பாலாஜி சிங் ஆகியோர் கலந்து கொண்டுபேசினர் மேலும்
மாவட்ட ஆட்சியர் வளர்மதி இ.ஆ.ப., கூறியதாவது:- சாலையில் வாகனங்
களை ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை முறையாகக்
கடைபிடித்தாலே விபத்துகள் நடக்காது பெற்றோர், உறவினர் தலைகவசம் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்த வேண்டும் சாலைகளில் கைகளைக்
கோர்த்தோ, பேசியபடி, கடக்கவோ, நடக்கவோ கூடாது. இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்புடன் கூட்டிச்செல்ல வேண்டும் பேசியவாறு வாகனத்தை ஓட்டக் கூடாது சாலையில் விபத்து நடந்திருப்பதைக் கண்டால் உடனே தகவல் மையங்களுக்கு தெரிவிக்கவேண்டும் உரிமம் பெற்றுதான் வாகனங்களை
இயக்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நிகழ்ச்சியில்
சாலைபாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை ஆட்சியர். வளர்மதி இ.ஆ.ப., மாணவிகளுக்கு வழங்கினார். முன்னதாக சாலைபாது காப்பு விதிகளை மதிப்பது குறித்த உறுதி மொழியினை ஆட்சியர் வளர்மதி இ.ஆ.ப., தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள், கல்லூரிபே ராசிரியர்கள், மாணவிகள் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெகதீஸ்வரன் நந்தகுமார் பழனி கோவர்தன் பழனி முடிவில் உதவி கோட்ட பொறியாளர் நிதின் நன்றி கூறினார்.,
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.