ஸ்ரீ நாக வைத்யசாய் தியான பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது!

தாராபுரம் ஸ்ரீ நாக வைத்யசாய் தியான பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் இயலாதவர்களைத் தேடி இயன்ற உதவி* சேவைத் திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா இன்று நடைபெற்றது. 
குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் K.பாப்புகண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், மாவட்ட திமுக துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, தாராபுரம் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, நகர காங்கிரஸ் தலைவர் கே.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சத்தியபாமா பொன்னுசாமி, திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் எம். ஜெய்லானி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சாந்தா தேவி, மாவட்ட சமூக நலத்துறை திட்ட அலுவலர் ஜி.நாகலட்சுமி, திமுக மருத்துவர் அணி தலைவர் டாக்டர் இந்திராணி, மாவட்ட திமுக அயலக அணி தலைவர் ஏ.வி.எச். ரஹ்மத்துல்லா, வைகை பாஸ்கரன் அருக்காணி ராமசாமி, சசிகலா தில்லை முத்து, ஜீவா பெரியசாமி, நகர திமுக துணைச் செயலாளர் மா.தவச் செல்வன், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தன், நகர மன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் ப. முத்துலட்சுமி, ஆர் முரட்டாண்டி, சமூக ஆர்வலர் டாக்டர் சிவசங்கர், ஐ ஓ பி வங்கி வணிகத் தொடர்பாளர் அப்பாஸ் அலி, கவி ஸ்ரீ முனியப்பன், எம்.எஸ் காய்கறி கடை கோவில்பட்டி முருகேசன், கீதா ஸ்டோர்ஸ் தண்டபாணி, முனியாண்டி விலாஸ் மகேந்திரன், எம்.எஸ். வெஜிடபிள்ஸ் மணிகண்டன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த அனைவரையும், கோவில் பரம்பரை அறங்காவலர் G.காளிதாஸ் சுவாமிகள், சாய் அம்மா என்கிற K.பார்வதி, எஸ்.வி. எஸ். சாகுல் அமீது, கே.சீனிவாசன், கே கனகராஜ் சந்திரா கோவிந்தராஜ் பெட்டிக்கடை மணி சீனிவாசன் செட்டியார் 
சாய் மாதா என்கிற விஜயலட்சுமி, பவித்ரா கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர்.