களம்பூரில் பாஜகவினர் திமுகவை கண்டித்து போராட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே நேற்று 06.09.2023 மத்திய அரசாங்கத்தின் மூலம் பட்டியலின மக்களுக்கான ஒதுக்கப்படும் நிதியை, தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் அவர்கள் வேறு பல திட்டங்களுக்கு பயன்படுத்துவதை கண்டிக்கும் போராட்டம் வடக்கு மாவட்ட தலைவர் C. ஏழுமலை M.A., தலைமையில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை பேசியபோது, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மத்திய அரசாங்கத்தின் மூலம் நமது இந்திய பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி ஜி. பட்டியலின மக்களுக்கென பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெறவும், அவர்களின் வாழ்க்கை மலரவும், பல்வேறு நிதிகளை தமிழக அரசிற்காக ஒதுக்கிகிறார்கள். அந்த நிதிகளை தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திமுக அரசின் சார்பாக பல்வேறு திட்டங்களுக்கு அந்நிதிகளை பயன்படுத்தி செயல்படுத்துகிறார். இனிவரும் காலங்களில் மத்திய அரசாங்கத்தின் மூலம் தமிழக பட்டியலின மக்களுக்கென ஒதுக்குகின்ற நிதியை அவர்களுக்கெனவும், அவர்களது வாழ்க்கை மலரவும் பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு பட்டியலின மாவட்ட தலைவர் முனைவர் E. முத்து முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர், மாநிலத் துணைத் தலைவர் குட்டி என்கிற தீனதயாளன், மாநில செயற்குழு உறுப்பினர் சாசா. வெங்கடேசன், பட்டியலின அணி முன்னாள் மாவட்ட தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர்கள் ஏழுமலை, திருமலை, களம்பூர் பேரூராட்சி நிர்வாகிகளான கார்த்திகேயன், குமரேசன், புஷ்பாவதி, கோபி , ரவி ரங்கநாதன், பாக்யராஜ், உதயகுமார், சுரேந்தர்,தீனா, ரவி, குணாநிதி, பரசுராமன், பெருமாள், சிவராமன், அறிவுடைநம்பி, பாலாஜி, கோவிந்தசாமி, பழனி, ராமன், பாண்டியன் செய்யாறு சட்டமன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான பா.சீனிவாசன், அஜித்குமார், சுரேஷ், G.K.சாமி, பூங்காவனம், ரேகா மற்றும் ஆரணி, போளூர், செய்யார், வந்தவாசி மண்டல நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான தாமரைச் சொந்தங்கள் அனைவருக்கும் வடக்கு மாவட்டத்தின் சார்பாகவும், பட்டியல் அணி சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.