அரக்கோணத்தில் வாகனம் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்டதில் போக்குவரத்து நெரிசல்!
இராணிப்பேட்டை மாவட்டம். அரக்கோணம் அடுத்த மங்கம்மா பேட்டை தனியார் பேருந்து,காருடன் உரசியலில் இருதரப்பினருக்கிடையே மோதல் இச்சம்பவத்தில் பேருந்தின் நடத்துனர் தாக்கப்பட்டார். அதை தொடர்ந்து பேருந்து நகரின் முக்கிய பகுதியான தாலுக்கா அலுவலகம் எதிரே தனியார் பேருந்து ஓட்டுனர் வாகனத்தை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.சுமார் பத்து நிமிடம் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் சாலையின் இருபுறமும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் பள்ளி வாகனங்களும் மற்றும் கல்லூரி வாகனங்களும் அணிவகுத்து நின்றது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து வைத்து,பேருந்துயை காவல் நிலையத்துக்கு எடுத்துச்
சென்றனர்.பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் மீது தக்க நடவடிக்கை என உறுதி கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பிறகு காவல் நிலையத்தில் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.