திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் வட்டம் போடி காமன் வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்க புரம் -வத்தலகுண்டு செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மேல் மோதி விபத்து. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சம்பவ இடத்திலேயே பலி. மேலும் இந்த விபத்து நடைபெறுவதற்கு காரணம் சாலைகளின் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால்தான் இந்த விபத்துக்கள் நடந்திருக்க கூடும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கூறப்படுகிறது. மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தலகுண்டு செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே பலி?
• Bharathaidhazh
வத்தலகுண்டு செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே பலி?