தென்காசியில் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா!
டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிநலத்துறை இணைந்து 02.09.2023 அன்று சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி மெட்ரிகுலேசன் பள்ளியில் வைத்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.துரை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ்.எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திரு.தி.சதன்திருமலைக்குமார் அவர்கள் சிறப்புரைஆற்றினார்கள். திரு.கா.சண்முகசுந்தரம், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு), திருநெல்வேலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தனியார் நிறுவனங்களில் பணிக்குதேர்வு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு அனைவருக்கும் இச்சிறப்பு விருந்தினர்களால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் 102 நிறுவனங்கள் மற்றும் 7 திறன்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 2176 வேலைநாடுநர்கள் கலந்துக்கொண்டனர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 236 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 73 வேலைநாடுநர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மனுதாரர்கள் திறன்பயிற்சி தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இம்முகாமில் தென்காசி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் வாயிலாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.ஷீ.ரா.ரம்யா, திட்டஅலுவலர், மாநிலஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திரு.மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கே.என்.ஜெயபிரகாஷ், சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளர் டாக்டர்.எஸ்.சுப்பையா ஸ்ரீனிவாசன், டாக்டர் V.S.சுப்பாராஜ் மற்றும் பள்ளி முதல்வர் திரு.C.A.சுருளிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.