செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்!
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்குதல் சார்ந்து 31.08.2023 அன்று செங்கோட்டை வட்டார வள மையத்தில்  வட்டார கல்வி அலுவலர் அ.ஜான் பிரிட்டோ தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வையாளர் (பொ), வே.சுப்புலட்சுமி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.சுகந்தி புதிய பாரத எழுத்தறிவு திட்ட சிறப்பம்சங்களை தெளிவாக எடுத்துரைத்தார். அனைத்து மையங்களுக்கும் கற்போர் கட்டகங்கள் வழங்கப்பட்டன. 1 9 2023 முதல் பிப்ரவரி 2023 வரை கற்றல் செயல்பாடுகள் நடத்திடவும் மார்ச் 23ல் நடைபெற உள்ள மதிப்பீட்டு தேர்வில் அனைத்து கற்போரையும் பங்கேற்கச் செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர் அ.முத்துசரோஜினி நன்றியுரை கூறினார்.