இன்று (01-09-2023). மாமன்னன் பூலித்தேவன் அறக்கட்டளை புதிய பார்வை ஆசிரியர் டாக்டர் ம.நடராசன் தலைமையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, டாக்டர் ஜெய்லானி, மஹா குரு. பாலபிரஜாபதி அடிகளார் மற்றும் அனைத்து ஜமீன்கள் அறங்காவலர்களாக உள்ளனர் ஆண்டுதோறும் நெல்கட்டும் செவலில் பெரிய மாநாடு போன்று
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள அவர்களுக்கு அறு சுவை உணவு வழங்கி பிரமாண்டமாக டாக்டர் ம.நடராசன் நடத்துவார். ஆண்டுதோறும் ஒரு வாரத்திற்கு முன்பே டாக்டர்
ஜெய்லானி சென்று பூலித்தேவன் வாரிசு கோமதிராணி அவர்களிடம் ஆலோசனை பெற்று விழாவை ஒழுங்கு படுத்துவார். இந்த அரண்மணையில்
முதன்முதலில் டாக்டர் ஜெய்லானியின் முயற்சியில் நூலகம் அமைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்த மாமன்னர் பூலித்தேவன் வீர வரலாற்றை புத்தகமாக டாக்டர்
ம.நடராசன் எழுதினார். அதோடு
இந்தியாவே திரும்பிபார்க்க வைத்த டாக்டர் நடராசன். பூலித்தேவன் அவர்களுக்கு விழா எடுத்த தைப்போல் மீண்டும் தொடர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறை
வேற்ற இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்!
டாக்டர் ஜெய்லானி,
டாக்டர் நடராசன் தலைமையிலான
மாமன்னர் பூலித்தேவன் அறக்கட்டளை அறங்காவலர்.