சந்திரயான் 3 சாதனை சமூக விழிப்புணர்வு : சகோதரிகள் தேசியக்கொடி ஏந்திய படியே யோகாசனம்!
தென்காசி மாவட்டம். சந்திரயான் 3 இந்தியா சாதனை சமூக விழிப்புணர்வு சகோதரிகள் யோகாசனம்  
இரவணசமுத்திரம்
சந்திரயான் 3 வெற்றிக|ரமாக நிலவில் தரையிறக்கி நமது இந்தியா சாதனை படைத்ததை முன்னிட்டு குற்றாலம் செய்யது பள்ளி குழும யோகா சகோதரிகள் மிஸ்பா, ஷாஜிதா ஜைனப் ஆகிய இருவரும் சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள் கடின முயற்சியால் இந்தியா வெற்றி பெற்றவகைகளை போற்றும் வகையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போல் இந்தியா வரைபடத்துடன் வண்ண பொடிகளால் அலங்கரித்து கைகளில் தேசிய கொடியுடன் யோகாவில் ஈடுப்பட்டனர் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது இவ் வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையை நமது இந்தியா பெற்றுள்ளது இதனை போற்றும் வண்ணம் தென்காசி மாவட்டம். கடையம் அருகில் இரவணசமுத்திரத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன் - ஜலிலா தம்பதியரின் மகள்கள் குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தில் ஷாஜிதா ஜைனப் 5 ம் வகுப்பும் யோகா நட்சத்திரம் மிஸ்பா நூருல் ஹபிபா 12 ம் வகுப்பு ம் இச்சகோதரிகள் பயின்று வருகின்றனர் இவ்விருவரும் உள்ளுரில் வைத்து நிலவில் லேண்டர் தரையிறங்கும் காட்சி போல் இந்திய வரைபடத்துடன் வடிவமைத்து கைகளில் தேசிய கொடி ஏந்தி பல்வேறு யோகாசனம் மூலம் சந்திரயான் 3 வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகள் கடின உழைப்பாலும் திறமையாலும் உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளதை போற்றும் வகையில் இந்நிகழ்வில் ஈடுப்பட்டனர் இந்நிகழ்வில் யோகா ஆசிரியர் குரு கண்ணன் , பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த அக்கா,தங்கை இருவரும் யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றும் யோகா, ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .