வாலாஜாபாத் பேரூராட்சியில் எனது தாய் மண் எனது தேசம் (Meri Maati Mera Desh) மூலம். மரக்கன்று நடும் விழா
காஞ்சிபுரம் மாவட்டம். வாலாஜாபாத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் இந்திய அரசாங்கம் 76 வது சுதந்திர அமுதப் திருவிழாவை முன்னிட்டு (Meri Maati Mera Desh) எனது தாய் மண் எனது தேசம் என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. இந்த பெருவிழா இயக்கத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், பங்கெடுக்கும் விதமாக கீழ்கண்ட நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்களின் உத்தரவின் பேரில்‌. காஞ்சிபுரம் மாவட்டம். மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஏ.வில்லியம் யேசுதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க.

 வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட மரக்கன்று நடுவிதமாக மரம் வளர்ப்போம்! மண் வளம் காப்போம்!! மழை பெறுவோம்!!! என்ற விளம்பர வாசகத்துடன் பொது இடங்களில் அரசு புறம்போக்கு நிலம் ஒன்றை தேர்வு செய்து அவ்விடத்தில் 75 உள்ளூர் மர வகைகள், வேம்பு, பூங்கன், புளியங்கன்று, பூவரசன், வாதநாராயணன், முருங்கை, நெல்லி, கொய்யா, மாதுளை, நாவல் போன்றவற்றை சார்ந்த மரக்கன்றுகளை தோட்டக்கலைத் துறை மற்றும் வனத்துறை மூலம் மரக்கன்றுகளை பெறப்பட்டு வாலாஜாபாத் பேரூராட்சிகளில் மற்றும் நட்டு வைத்து வளர்த்து பசுமையாக வைத்துக் கொள்ள மாசற்ற சூழலை உருவாக்கிட வேண்டும் என்று பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் பேரூராட்சி தலைவர் திருமதி. Wes. இல்லாமல்லி ஸ்ரீதர், பேரூராட்சி துணைத்தலைவர் AV. சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.லோகநாதன் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து துவக்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை (mass cleaning) என்ற முறையில் மரக்கன்றுகளை நடவு செய்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை பெற்றுக் கொண்டனர்.

 இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் திருமதி. Wes. இல்லாமல்லி ஸ்ரீதர், பேரூராட்சி துணைத்தலைவர். திரு. AV. சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் திரு. எஸ்.லோகநாதன், மற்றும் இளநிலை உதவியாளர், தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.