தென்காசி குறுவட்ட தடகள் விளையாட்டு போட்டிகள் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ் சூப்பர் சீனியர் பிரிவு குண்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும், மாணவர் முத்துராம் 400 மீ ஓட்டம் மற்றும் 4 க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் சுப்பிரமணியன் 1500 மீ ஓட்டத்தில் முதலிடமும், 800 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர்.
மாணவர் ஸ்ரீராம் கோகுல் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4 க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் தன நந்தகுமார் வட்டு எறிதலில் இரண்டாமிடமும், மாணவர் முகமது இம்ரான் உயரம் தாண்டுதலில் முதலிடமும், மும்முறை இரண்டாமிடமும் பெற்றனர். தாண்டுதலில்
மாணவர் சுலைமான் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும் 4க்கு 400 தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் முகமது அபுஹனிபா 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், மீ ஓட்டத்தில் 400 இரண்டாமிடமும், 4 க்கு 100 மீ ஓட்டம் மற்றும் 4 க்கு 400 தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் முகமது அக்வின் 100 மீ ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர்.
ஆண்களுக்கான சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவர் மதீஸ் 400 மீ, 800 மீ, 1500 மீ ஓட்டங்களில் முதலிடமும், 4 க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், 4க்கு 400 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் பிரசன்னா 3000 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் பாஸ்கர் ஈட்டி எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில்
இரண்டாமிடமும், மாணவர் சிவசக்திவேல் குண்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.
மாணவர் முகமது உவைஸ் முகைதீன் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டங்களில் மூன்றாமிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் ஸ்ரீ சக்திவேல் 4 க்கு 100 தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 4 க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் புகழேந்தி மும்முறை தாண்டுதலில் மூன்றாமிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் அசிம் முஸ்தபா 400 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், க்கு 4 100 இரண்டாமிடமும் பெற்றனர். மீ ஓட்டத்தில்
ஜூனியர் பிரிவில் மாணவர் ஹரிஸ்சரண் 600 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் சுரேந்திரன் சக்தி 80 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் முகமது ஹசீம் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.
சூப்பர் சீனியர் மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி கார்த்திகா மீ ஓட்டம், நீளம் 100 தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் 4 க்கு 100 தொடர் ஒட்டத்தில் முதலிடமும், மாணவி ரீனா வைரஜோதி கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், 800 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், 3000 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவி கஜ உதயா உயரம் தாண்டுதலில் முதலிடமும், 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவி ஹேமா ஹரிதா ஸ்ரீ 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர்.
சீனியர் பிரிவில் மாணவி மாணிக்க ஸ்ரீ 400 மீ, 800 மீ, 1500 மீ ஓட்டங்களில் முதலிடமும், மாணவி காவ்யா உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும், மாணவி அமிர்தா 3000 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். சீனியர் பிரிவில் மாணவி மாணிக்க ஸ்ரீ 400 மீ, 800 மீ, 1500 மீ ஓட்டங்களில் முதலிடமும், மாணவி காவ்யா உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும், மாணவி அமிர்தா 3000 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
சூப்பர் சீனியர் மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் சுரேஷ், சீனியர் மாணவர்கள் பிரிவில் மாணவர் மதீஸ், சூப்பர் சீனியர் மாணவிகள் பிரிவில் மாணவி கார்த்திகா, சீனியர் மாணவிகள் பிரிவில் மாணவி மாணிக்க ஸ்ரீ ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.2,000க்கா காசோலை வழங்கப்பட்டது. மேலும் ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
சாம்பியன் பட்டம் பெற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். இதற்கு கடுமையாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பானுமதி, செல்வம், ராமர், மணிகண்டன், பாண்டிதுரை ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.