தென்காசி மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள வ.உ.சி வட்டார நூலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தட்டச்சராக நியமனம் பெற்றுள்ள கலைச்செல்வன், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தென்காசி நூலகம் மூலம் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்த மாவட்ட ஆட்சித் தலைவர். இன்று இம்மாணவரையும் பாராட்டி வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
நூலகம் மூலம் இலவச பயிற்சி இலவச மாதிரி தேர்வு இலவச மெட்டீரியல் மூலம் சாதனை புரிந்து வரும் தென்காசி மாவட்ட
பட்டதாரிகள், டிஎன்பிஎஸ்சி தேர்விலும் தென்காசி வ உ சி வட்டார நூலகத்தின் வெற்றி பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் கண்காணிப்பாளர் சங்கரன் வட்டார நூலகர் பிரம நாயகம் கிளை நூலகர் சுந்தர் உடனிருந்தனர்.