கந்திலி தெற்கு ஒன்றியத்தில் பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தை ஜோலார்பேட்டை எம்எல்ஏ ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம், 
கந்திலி தெற்கு ஒன்றியம், 
அச்சமங்கலம் மற்றும் மாக்கனூர் பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தை திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான 
 க.தேவராஜி MLA நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
இந்நிகழ்வில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மு.ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் சம்பூர்ணம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ஹேமாவதி, பூரிகமானிமிட்டா ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சதீஷ், கிளைக் கழக நிர்வாகிகள் காந்தி, அரவிந்த், சரவணன், சந்திரமோகன், சம்பத், ஏவி பெருமாள், நவீன், காமராஜ், சகாதேவன், சையது உசேன், அனீஸ், சீனிவாசன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தார்கள்.