வேலூர் ஓட்டேரி கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி 53 வார்டு கவுன்சிலர் பாபி கதிரவன் அவர்களின் தலைமையில்வேலூர் ஓட்டேரி பசுமை குழு, மக்கள் களப்பணி குழு சார்பில் ஓட்டேரி ஏரிக்கரையோரம் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப,நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர் ரவிசங்கர், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்ப பதிவுகள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேலூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வேலூர் ஓட்டேரி கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு!
• Bharathaidhazh
வேலூர் ஓட்டேரி கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு!