சைக்கிள் பயணம் செய்து சாதனை புரிந்த இலங்கை தமிழ் பாடசாலை ஆசிரியருக்கு பாராட்டு!
சைக்கிள் பயணம் செய்து சாதனை புரிந்த இலங்கை தமிழ் பாடசாலை ஆசிரியருக்கு பாராட்டு!


இந்திய மண்ணில் புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் இலங்கை வட மாகாணம் வவுனியாவை சேர்ந்த பாடகசாலை ஆசிரியர் பிரதாபன் தர்மலிங்கம் என்பவர் மரம் நட்டு மண்வளம் காக்கவும் மனிதநேயம் கொண்டு மக்கள் நலம் மேற்கொண்ட 38 மாவட்டங்களில் மூவாயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கடந்த 23-7-2023 அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலை முன்பு இருந்து தொடங்கினார் இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுநல அமைப்புகள். சமூகநல அமைப்புகள். ரோட்டரி. மற்றும் அரிமா சங்கங்கள். வனம் அமைப்புகள். அரசுத்துறை காவல்துறை அதிகாரிகள் பணியாளர்கள் இளைஞர் மன்றங்கள் .பொதுமக்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள். ஆசிரியர்கள் என அனைவரும் சிறப்பாக வரவேற்று உற்சாகப்படுத்தி மண் வளம் காக்க மனிதநேயத்துடன் மரக்கன்றுகளை நடவு செய்தனர் நிறைவு நாள் அன்று இலங்கை இசையமைப்பாளரும் பாடகருமான சிலோன் அமீர்கான் தலைமையில் மூத்த பத்திரிக்கையாளரும் மக்கள் சேவகருமான நமது பூமி தமிழகம் சந்திரகுமார். மற்றும் லண்டனில் வசிக்கும் இலங்கை வட மாகாணம் வவுனியா ஓமந்தை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் இந்திரன். ஞானேஸ்வரன். குஞ்சன். மற்றும் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் கன்னியாகுமரி . அரவிந்த் .தூரி. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிவானந்தம். பிரபாகரன். திருவண்ணாமலை சக்தி. கோவை சேம்மடு குகன் .பாடகரும் நடிகருமான சேலம் மோகன். ஆகியோர் முன்னிலையில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான முந்தானை முடிச்சு திரைப்பட புகழ் கே பாக்யராஜ். குணச்சித்திர நடிகர் செந்தில். மற்றும் போண்டா மணி. நடிகை மும்தாஜ். உள்ளிட்ட பலர் 3000 கிலோமீட்டர் விழிப்புணர்வு மிதிவண்டி சைக்கிள் பயணம் செய்து சாதனை புரிந்த பாடசாலை ஆசிரியருமான இலங்கை வட மாகாணம் வாவுனியா தர்மலிங்கம் பிரதாபன். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசு வழங்கியும் பொதுமக்கள் மற்றும் பலர் பாராட்டினர்