கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பேரூராட்சித் தலைவர் திறந்து வைத்தார்
• Bharathaidhazh
கன்னியாகுமரி மாவட்டம். குளச்சல் அடுத்த கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட கொத்தனார் விளை ஊரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர் சிங் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப், டாக்டர் பாரத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர் ஜெகன், B.J.P பிரமுகர் பிரமோத் சுகாதார செவிலியர் ஜீவா செலின் கல்லுக்கூட்டம் பேரூர் உறுப்பினர்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்து இளஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்