திருப்பரங்குன்றத்தில் மலையடி வாரத்தில் இருந்து உச்சிக்கு செல்வதற்கு விரைவில் ரோப் கார்.
மதுரை மாவட்டம். ஆறுபடை வீடுகளில் முதற்படையான திருப்பரங்குன்றத்தில் ரோப் கார். தென்பரங்குன்றம் மலையடி வாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் உச்சிக்கு செல்வதற்கு ரோப் கார் அமைப்பதற்கு ஐடி கார்ட் நிறுவனம் படிக்கட்டுப் பாதையில் சர்வேயர் பணி நேற்று தொடங்கியது. திருப்பரங்குன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். திருப்பரங்குன்றம் மலை 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற வேண்டும் என்று மலையை சுற்றி கிரிவலம் வரும் பக்தர்கள் ஏராளம். விரைவில் ரோப் கார் அமைத்தால் பக்தர்களுக்கு வரப்பிரசதமாக அமையும்.

மதுரை சமூக ஆர்வலர் ஓகே சிவா