குமரி மாவட்ட இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிற்சி முகாம் நடந்தது.
குமரி மாவட்ட இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிற்சி முகாம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் வேலாயுத பெருமாள் துவக்க உரையாற்றி, பயிற்சியாளர் ஹக்கீம் வரவேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்தார், 
மாவட்டச் செயலாளர் செல்வராஜ் சாலோமன் தகவல் உரிமைச் சட்டத்தின் சிறப்புகளையும், அதன் அவசியத்தையும் வலியுறுத்தி சிறப்பு விருந்தினர் மற்றும் RTI பயிற்றுனர்  ஹக்கீம அவரை அறிமுகப்படுத்தினார். 
 
தகவல் உரிமைச் சட்டம் 2005 இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது?
இதில் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலமாக மனுக்கள் எழுதி என்னென்ன பயன்கள் பெறலாம்? 
இந்திய நாட்டு குடிமகனின் கடமைகள் என்ன என்பதை தெளிவாக கற்றுக்கொண்டனர்.

இதில் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர். மற்றும் முகமது யூசுப், ஜோணி, சிவா, ஹாஜாபாய் மற்றும் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.