தென்காசி மாவட்டம். செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் சட்ட பிரிவுகளை மாற்றம் செய்வதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் முப்பெரும் சட்டங்களான,
1)இந்திய தண்டனை சட்டம்,
2)இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்,
3)இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களை,
1)தி பாரதிய நியா சன்ஹிடா, 2023
2)பாரதிய நகரிக் சுரக்ஷா
சன்ஹிடா, 2023
3)பாரதிய சாக்ஷிய பில், 2023
என மொழிமாற்றம் செய்து சட்டப்பிரிவுகளை மாற்றி திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனடியாக கைவிடக் கோரியும்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு நாள் நீதிமன்ற பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருப்பது எனவும்,
செங்கோட்டை நீதிமன்ற வளாகம் முன்பாக, ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டியும்,
செங்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,
நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி நடைபெற்ற
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் முத்துக்குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். மூத்த வழக்கறிஞா் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைத் தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் மொழி மாற்றம் மற்றும் சட்டத்திருத்தங்களை கைவிடக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினா். நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞா்கள் சங்கரலிங்கம், ஆதிபாலசுப்பிரம்ணியன், இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் சிதம்பரம், சத்தியசங்கர், நல்லையா, சுபசேகர், ஆசாத், வெங்கடேஷ், முகம்மதுசிராஜ், ராமலிங்கம், குமார், வீரபாண்டியன், வைரவன், ராஜா, சிவசுந்தரவேலன், முத்துராஜ், மாலதி, இசக்கிஇந்திரா, கலீலா உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.