தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது‌.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (21.08.2023) மாவட்ட துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. மக்கள் ஆட்சித் தலைவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் இலவச பயிற்சி வகுப்பு வாயிலாக TNPSC Group- 1, II, IV மற்றும் TNUSRB, TRB ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சியில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினையும், மேலும் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 07-மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500/- வீதம் மொத்தம் ரூ.59,500 மதிப்பிலான காதொலி கருவிகளும், 11- மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசிகள் தலா ரூ.25,000/- வீதம் மொத்தம் ரூ.2,75,000/- மதிப்பிலான திறன்பேசிகள் என மொத்தம் ரூ.3,34,500/- மதிப்பிலான தலைவர்

நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., வழங்கினார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 347 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.