தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு!
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற செ.ராஜேஷ்குமார் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் இ.சீனிவாசன், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்ல, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவகுமார், முனைவர் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன்,  வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ்.மணியன், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் சிந்தனைசெல்வன் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

 ஆய்வுக்கூட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த தாய் அல்லது தந்தையை இழந்தவர்களின் குழந்தைகள் பயிலும் மாணவ/மாணவியருக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த கால வைப்புத்தொகைக்கான ரூ.50,000 மற்றும் ரூ.75,000 பத்திரங்களை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் க.அன்பழகன் வழங்கினார்கள். குழு தலைவர் இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் க.அன்பழகன் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவிற்கிணங்க, இன்றையதினம் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது. கால்நடை மருந்தகம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு விரைவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது, அரசு தலைமை மருத்துவமனையில் 6 தளங்களுடன் 76,000 சதுர அடியில் ரூ.22 கோடியில் குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டு வருகிறது இன்னும் 1 ஆண்டுக்குள் பயன்பாட்டில் வரும். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ரூ.9 கோடி மதிப்பில் கூடுதல் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது, தொகுதிக்கொரு விளையாட்டு அரங்கம் என்ற முறையில் நமது விளையாட்டு துறை அமைச்சர் மூலமாக ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கத்திற்கு ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டு உள் விரைவாக இந்த பணி நடைபெற இருக்கிறது, காவல்துறையின் தலைமை கட்டிடம் ரூ.54 கோடி மதிப்பில் கட்டி திறக்கும் நிலையில் உள்ளது, மருத்துவ கிடங்கு ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. விபத்தில் மரணம் அடைந்த தாய்/தந்தை இறந்தவர்களின் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 குழந்தைகளுக்கு தலா ரூ.50000
த்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சரின் விரிவான பல்வேறு திட்டப்பணிகள் மூலமாக ஆய்வு செய்ததில் தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் அனைத்து பணிகளும் முறையாக நடைபெற்று வருகிறது குறிப்பாக இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் பார்த்து வருகிறோம் இதனை நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் நீர்வளத்துறை மூலமாக இருக்கிற ஆற்றுப்பாசனத்திற்கு லஸ்கர் இல்லாமல் இருக்கிறது, அதனால் இந்த குழுவின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் லஸ்கர் வேண்டும் என்ற தீர்மானத்தை தயார் செய்து அனுப்பிருக்கிறோம் இந்த தீர்மானம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மருத்துவர்கள் குறைவு என்ற கோரிக்கைக்கு மருத்துவர்கள் உடனடியாக துறையின் பிரிவில் அனுப்புவதற்கு பரிந்துரைத்துள்ளோம். அதுமட்டுமல்ல எல்லா நோய்களுக்கும் சிகிச்சைகள் அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம், திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புவதைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ரூ.400 கோடிக்கும் மேல் தற்போது தென்காசியில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவைப்படுகின்ற வசதிகளை ஏற்பாடு செய்து தர பரிந்துரைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, பதிவுத்துறை, வணிகவரித் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாய்வு கூட்டத்தில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், பொதுபணித்துறை செயற் பொறியாளர் அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொ) ராஜமனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.