விவசாயிகளுக்கு வாழைக்கன்றில் ஊசி மூலம் மருந்து செலுத்தும் விளக்கம் அளிக்கும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள்! விழிப்புணர்வு
விவசாயிகளுக்கு வாழையில்
ஊசி மூலம் மருந்து செலுத்துதல் குறித்து செயல்முறை விளக்கம்

தென்காசி மாவட்டம். அருகே உள்ள கணக்குப்பிள்ளை வலசையில் விவசாயிகளுக்கு வாழையில் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறை குறித்து விளக்கம் அளிக்கும் விழிப்புணர்வு நடைப்பெற்றது.

இந்த விழிப்புணர்வை திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ்-
பாட ஆசிரியர் விஜயகுமார், குழு ஆலோசகர் ஜெயபி ரபா அவர்களின் அறிவுரையின் படி இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் தோட்டக்கலை மாணவிகள் லக்ஸா ஹரிணி, ரேணுகா தேவி,வினோதா, வேல் அரசி, அபிதாசினி, நிஷா ஶ்ரீ, ஆகியோர்
செயல் முறை விளக்கம் அளித்தனர்.

விவசாயிகளின் வாழை மரத்திற்கு
 கருகல் / வாடல் நோய், சிகடோகா இலைப்புள்ளி போன்ற நோய் தாக்கத்தைக் குறைக்கிறது என்ற விழிப்புணர்வை விவசாயிகளின் விளைநிலங்களுக்கு நேரடியாக
சென்று தங்களது தொழில் நுட்பங்களையும், விவசாயிகளின்
அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.