சிவன்மலை ஊராட்சிகளில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான பூமி பூஜையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்டம். காங்கேயம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் புதூர், படியூர் மற்றும் சிவன்மலை ஊராட்சிகளில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான பூமி பூஜை மற்றும் புதிய பள்ளி கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், துவக்கி வைத்தார். இதில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல.பத்மநாபன் மற்றும் மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்துக் கொண்டனர்