இந்திய நாட்டின் 77வது சுதந்திர தின விழாவில். பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கும். வேலூர் மண்டல உதவி இயக்குனருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச்சான்று வழங்கினார்.
77 வது சுதந்திர தின விழாவில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) மற்றும் உதவி செயற்பொறியாளர் திருமதி. ச.அம்சா அவர்கள். பேரூராட்சிகளின் மக்கள் சார்ந்த பணிகளும், அரசு கட்டிடங்கள் சார்ந்த ஆய்வும் மற்றும் சுகாதாரம் பிளாஸ்டிக் ஒழித்தல், மரக்கன்றுகள், தூய்மை யாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பணிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியமைக்கு வேலூர் மாவட்ட மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் பொறியாளர் திருமதி. ச.அம்சா அவருக்கு. மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும். மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி. எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் நற்சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.என்.சுரேஷ், பயிற்சி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் திரு. பி.வினோத் குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் தி.சரவணன், அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோ.கோபிநாதன், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் க.குமார், தக்கோலம் போன்ற பேரூராட்சிகளில் சிறப்பாக பணியாற்றமைக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை எடுத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு. சக செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.