வாலாஜாபாத் பேரூராட்சியில் 77 வது சுதந்திர தின விழாவை கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தேர்வு நிலை பேரூராட்சியில் அலுவலக வளாகத்துக்குள் உள்ள தேசியக்கொடி மரத்தில் 77வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது இதில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர், துணைத் தலைவர் கவுன்சிலர்களுக்கு மாலை, அணிவித்தும் சால்வை போர்த்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் Wes. இல்லாமல்லி ஸ்ரீதர், பேரூராட்சி துணைத்தலைவர். AV. சுரேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.லோகநாதன், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர், தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.