77 வது சுதந்திர தின விழாவில் களம்பூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
77 வது சுதந்திர தின விழாவில் திருவண்ணாமலை மாவட்டம். களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சியில் மக்கள் சார்ந்த பணிகளும் மற்றும் சுகாதாரம் பிளாஸ்டிக் ஒழித்தல், மரக்கன்றுகள், தூய்மை யாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பணிகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியமைக்கு களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் எம்.உமா மகேஸ்வரி அவருக்கு. மாவட்ட ஆட்சிதலைவர் முருகேஷ் அவர்கள் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் நற்சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பயிற்சி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சியில் சிறப்பாக பணியாற்றமைக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை எடுத்து களம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.உமா மகேஸ்வரிக்கு. சக செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.