தேசிய புத்தகக் கண்காட்சியை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் J.G. பிரின்ஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
இதில் முதல் விற்பனையை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி துவக்கி வைத்தார். பெங்களூர் அரசு முதல் நிலைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் DR.A.சங்கரி பெற்றுக் கொண்டார்.
இரண்டாம் விற்பனையை கர்நாடகா,பிளாகி அரசு முதல்நிலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் Dr.R.ஸ்ரீநிவாசன் துவக்கி வைத்தார்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தனைணத்தலைவர் L.மகேஷ் லாசர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கன்னியாகுமரி
மாவட்ட கல்வி அலுவலர்( தொ.க) தாம்சன், மா.வி.அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சசிக்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சுரேஸ் மேசியதாஸ், தோழர் இசக்கிமுத்து, வரலாற்றறிஞர் அ.கா.பெருமாள், எழுத்தாளர் குறும்பனை சி.பெர்லின், சமூக சேவர்கள் சச்சின் மற்றும் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்திப் பேசினர். முன்னதாக NCBH மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நாகர்கோவில் கிளை மேலாளர் இரா.மு.தனசேகரன் பேசிய போது
கடந்த 73 வருடங்களாக கல்வி மற்றும் கலாச்சார பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் குமரி மாவட்டத்தில் வருடம் தோறும் 50 க்கும் மேற்பட்ட புத்தக கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்
மார்த்தாண்டத்தில் மூன்று வருடமாக
தேசிய புத்தக கண்காட்சி தற்பொழுது துவக்கியுள்ளோம்.
சிறப்பான வாசிப்பு பழக்கமே வளமான வாழ்விற்கு அடித்தளமாய் அமையும் என்பதாலும் அதை
மாணாக்கர்களிடம் இளம் வயதில் இருந்தே உறுவாக்கும் பெரும் முயற்சியை இத்தகைய
புத்தகக் காட்சிகள் செய்யும் என்பதால் தொடர்ந்து புத்தக கண்காட்சிகளை நடத்தி வருகிறோம்.
பெற்றோர்களும்,மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் , கல்லூரிகளும் இத்தகைய புத்தக கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து வந்து கண்காட்சி அரங்கை பார்வையிட ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார்.