செங்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் 2.50 லட்சம் செலவில் சுகாதாரக் கட்டிடம் திறப்பு விழா!
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரக் கட்டிடம் திறப்பு விழா!

 தென்காசி மாவட்டம். செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக முன்னாள் மாணவர் சாகுல் கமீது ரூ. 2.50 லட்சம் செலவில் மாணவர்கள் வசதிகளுக்காக கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளார். 

இதன் திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

நன்கொடையாளர் சாகுல் கமீது அவர்களின் தாயார் பாரிஸ்பேகம் சுகாதார அறையைத் திறந்து வைத்தார் .

விழாவில் வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு வாழ்த்திப் பேசினார்.

நிகழ்வில் செய்யது அப்துல் ரகுமான் ,ஷகிலாபேகம்அக்பர், ஃபைசல் ,சாகுல் ஹமீது,ரெபேக்கா பானு, ரம்ஜான், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி விஜயலட்சுமி நகர்மன்ற உறுப்பினர் இசக்கியம்மாள், கல்வியாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர் .

முடிவில் ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நன்கொடையாளர் உட்பட அனைவருக்கும் நன்றி கூறினார்.