குமரியில். அன்னை தெரசா அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பாணந்தோப்பு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா பிறந்த நாள் விழாவும் அன்னை தெரசா அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழாவும் பாணந்தோப்பு அனுக்கிரஷா ஹாலோபிரிக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் அன்னை தெரசாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆண்டுவிழா றசல் தலைமையில் ஆரம்பமானது. விழாவிற்கு டாக்டர். யோவாஸ் முன்னிலை வைத்து உரையாற்றினார்.தூத்தூர் புனித யூதா கல்லூரியின் பேராசிரியர் மரிய கிளாஸ்டின் மற்றும் தூத்தூர் பயஸ் உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் டார்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல அலுவலகத்தில் அலுவல கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்ற கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் சிறப்புரையாற்றினார்‌. ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். அம்பிகா அனைவருக்கும் நன்றி பாராட்டினார்.

 விழாவில் நித்திரவிளை ஏலாக்கரை பகுதியில் வசித்து வருபவரும் வேங்கோடு பெதனி நவஜீவன் சி.பி.எஸ்.சி பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ்ன் அனைத்து உலக சாதனைகளுக்கும் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில். ஏழைகளுக்கு துணிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் மற்றும் நிர்வாகிகள். பொதுமக்கள். பலர் கலந்துக் கொண்டனர்.