சமையலுக்கான எரிபொருள் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைத்திருக்கின்றது மத்திய அரசு, இது கடந்த 76 ஆண்டுகளில் இந்தியாவில் புதிது
இந்தியாவில் மட்டுமல்ல எந்த நாட்டிலுமே சில முக்கிய விஷயங்களின் விலை ஏறிவிட்டால் பின் இறங்காது, அதுவும் எரிபொருள் போன்றவை ஏறிவிட்டால் எல்லாமே விலை ஏறிவிடும்
இப்போது மோடி அரசு இச்சாதனையினை செய்திருக்கின்றது
உக்ரைன் ரஷ்யா போரின் விளைவாக கிடைத்த குறைந்தவிலை எரிபொருள், அதனை உலகை மீறி வாங்கிய சாதுர்யம், வாங்கியதை சரியாக நிர்வகிக்கும் திறன், வியாபாரிகள் பதுக்கல்காரர்கள் இடைநிலை அதிகாரிகளின் சுரண்டலை தாண்டி மக்களுக்கான சேவை என்பதில் சாதித்திருக்கின்றது மோடி அரசு
இது சாதனை சரித்திர சாதனை
நிச்சயம் இது உக்ரைன் போரினால் ஏற்பட்ட சூழலால் சாத்தியம் என்றாலும் முன்பு காங்கிரஸ் அரசு இருந்தது போல "அணிசேரா கொள்கை" இன்னும் பல அடிமை கொள்கையில் இருந்திருந்தால் இன்று நாடு ஒரு லிட்டர் பெட்ரோல் 150 ரூபாய்க்கும், ஒரு சிலிண்டர் 1500 ரூபாய்க்கும் சந்தித்து கொண்டிருக்கும்
மோடி அரசை பொறுத்தவரை உலகில் யாரும் பெரும் நண்பரும் இல்லை எதிரியுமில்லை, இந்தியா யாருக்கும் அடிமையுமில்லை, இந்த இந்திய தேசத்துக்கு எது நல்லதோ அதை சரியாக செய்வார்கள்
இதோ செய்துவிட்டார்கள்
மிக சரியான முடிவினை எடுத்த பாஜக அரசுக்கு வாழ்த்துக்கள், இன்னும் சில நாட்களில் பெட்ரோல் விலையும் குறையும் என எதிர்பார்க்கபடுகின்றது
தேசிய அவசரகால எண்ணெய் சேமிப்பு முழு கொள்ளளவை எட்டிவிட்டது, பாதுகாக்கபடும் எண்ணெய் அளவு நிரம்பிவிட்டது இனி இந்தியாவில் பெட்ரோல் விலையினை குறைக்கலாம் என யோசனை சொல்லபட்டிருக்கின்றது
மோடி அதனை நிச்சயம் செய்வார்
இந்த 200 ரூபாய் விலை குறைப்பு அறிவிக்கபட்டாலும் நாடு முழுக்க ஒரே விலைக்கு வருமா என்பது குழப்பம், காரணம் இந்திய அமைப்புபடி மாகாணங்களும் எரிபொருளுக்கு வரிவிதிக்கும்
இனி குறைந்த விலை சிலிண்டருக்கு வரிவிதிக்கும் போது வருமானம் குறையும் அதனால் அதை ஏற்றுகொள்வார்களா இல்லை 200 ரூபாய் குறைப்பின் பலனை குறைத்து 100 ரூபாய்தான் சலுகை செய்வார்களா என்பது இனிதான் தெரியும்
எப்படியோ மோடி அரசு பெரும் சாதனை செய்துவிட்டது இன்னும் தொடரும்
ஆக இதன் நன்றிகள் மோடி அரசுக்கு செல்லும், முழு தகுதியும் மிஸ்டர் புட்டீனுக்குத்தான் செல்லும்
பாருங்கள், புட்டீனால் உக்ரைன் ராணுவம் பலமாகிவிட்டது பெரும் பணம் உக்ரைனுக்கு கொட்டுகின்றது, ஐரோப்பிய அமெரிக்க ஆயுத சந்தைகள் உற்சாகத்தில் இருக்கின்றன
பெரும் தொழில்வாய்ப்பு ஆங்காங்கே ஐரோப்பாவில் பெருகுகின்றது
ரஷ்ய இடத்தை சீனா பிடித்து பெரும் சந்தோஷத்தில் இருக்கின்றது
இப்போது இந்திய மாதரசிகளும் புட்டீனால் மகிழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்
ஆக மிஸ்டர் புட்டீன் நீர் வாழ்வாங்கு வாழவேண்டும் ஆனால் அப்போரில் ஜெயிக்கவும் கூடாது கண்டிப்பாக தோற்கவும் கூடாது என்பதுதான் உலகின் பிரார்த்தனை
இப்படி ஒரு பிரார்த்தனை உலகில் எந்த தலைவனுக்கும் கிடைக்க்காது என்பதால் உற்சாகமாக கடமையினை செய்யவும்
ஸ்டான்லி ராஜன்