20 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் பணி நிரந்தரம் திட்டம் கையில் எடுக்கப்படுமா தமிழக அரசு?
20 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள்.
2017-ம் ஆண்டு பணி நிரந்தரம். 10 ஆண்டு கடந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் பணி நிரந்தரம் திட்டம் கையில் எடுக்கப்படுமா தமிழக அரசு? 

தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன இதில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் வழியாக அனைத்து பணிகளையும் செய்வதற்கு 60 சதவீதம் பெண்கள் மற்றும் 40 சதவீதம் ஆண்கள் என கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் தினக்கூலியின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 50 வீதம் பேரூராட்சிகளில் பணியில் சேர்க்கப்பட்டனர். 

இவர்கள் பேரூராட்சிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும் வரி வசூல்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், தினசரி அறிக்கைகள், டெண்டர்கள், பிளான் அப்ரூவல் திட்டப்பணிகள், தேர்தல் பணிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளின் பட்டியல்கள் உள்ளிட்ட பணிகளை கம்ப்யூட்டர் வழியாக பதிவு செய்து அதை செயல் அலுவலர் உள்பட மேல்அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இப்பொழுது அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் தான் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது இதனால் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அறிந்தது ஒன்றாகும் எனவே. 

இவர்களுக்கு அரசு வழங்கும் தினக்கூலியை தவிர வேறு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை இதனால் பல கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் குடும்பத்தை நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர். 

உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா பெருந் தொற்று பரவிய காலகட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் விடுமுறை எடுக்காமல் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வந்தனர் ஆனால்.

இவர்களுக்கு எவ்வித பணி பாதுகாப்பும் மற்றும் மருத்துவ காப்பீடும் இதுவரை செய்யப்படவில்லை கடந்த 2017 ஆம் ஆண்டு பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அவர்களின் தகவல் சேகரிக்கப்பட்டது. 

ஆனால் திடீரென அந்த திட்டம் காரணம் அறியாமலே கைவிடப்பட்டது ஆகையால் உடனடியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முழுவதும் உள்ள 490 பேரூராட்சிகளில் குறைந்த சம்பாலாதிற்கு பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு பேரூராட்சிகளின் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் நிரந்தர பணி என்னும் திட்டம் மீண்டும் கையில் எடுக்குமா தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் வேதனை தீர்க்கப்படுமா என்பது?.