ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக 1200 மரக்கன்றுகள் நடவு பணி துவக்கம்
திருப்பத்தூர் மாவட்டம். ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக மக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்பாடுகளில், ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு 1200 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 100 மரக்கன்றுகள் நடவுபட்டு துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வெ..தமிழரசி, துணைத் தலைவர் ம.ஸ்ரீதர், செயல் அலுவலர் செ.கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.