தென்காசியில். தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு (04.09.2023) அன்று முகாம் நடைபெறும்
தமிழநாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது சவுதி அரேபியா நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் ஸ்டாப் நர்ஸாக பணியாற்ற ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அறிவிப்பு.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது சவுதி அரேபியா நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் ஸ்டாப் நர்ஸாக பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களை கண்டறிவதற்காக சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 1 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இச்செவிலியர் பணிக்கு 21-37 வயதிற்குட்பட்ட மகளிரினை தேர்வு செய்வதற்காக சிறப்பு முகாம் தென்காசி மாவட்டத்திற்கு அருகாமையிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கதவு எண்,17C சிதம்பரம் நகர், பெருமாள்புரம், சி,காலணி, பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து 04.09.2023 அன்று காலை 10.30 முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும் Data Flow மற்றும் HRD சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களும்

விண்ணப்பிக்கலாம் மேற்படி பணியாளர்களுக்கு உணவுபடி, இருப்பிடம், விமான

பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும், இப்பணிக்கு மாத

ஊதியமாக ரூ,80,000 முதல் 1,00,000 வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமிற்கு வர இயலாதவர்கள் தங்களுடைய சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovmclmohsa20221@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் 9566239685, 6379179200, 04422505886 / 04422502267 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப, தெரிவித்துள்ளார்.