செங்கோட்டையில். எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக்கூட்டம்.
தென்காசி மாவட்டம். செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 
இக்கூட்டத்திற்கு திமுக நகச்செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஜவஹர்லால் நேரு, செயலாளர் நன்னூலகர் இராமசாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளியின் ஆசிரியா் சுதாகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடா்ந்து வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் பேசியதாவது:-

செங்கோட்டையில் நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீமூலம் சஷ்டியப்த பூர்த்தி சட்டநாதக்கரையாளா் (எஸ்.எம்.எஸ்.எஸ்) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1917ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2023ஆம் ஆண்டு வரையில் சிறப்பான கல்வி சேவையில் சிறந்து விளங்கி வரும் இப்பள்ளி கண்க்கிட முடியாத அளவிற்கு பல தலைவா்கள், மருத்துவா்கள், பொறியாளர்களை தேசபக்தர்ளை உருவாக்கியுள்ளது. மேலும் 106 ஆண்டுகளை கடந்து வந்த இப்பள்ளியின் நூற்றாண்டு விழா வரும் ஆகஸ்டு மாதம் 4வது வாரத்தில் கொண்டாடுவதற்கான முயற்சிகள் பள்ளியின் சார்பாகவும் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாகவும் நடைபெற உள்ளதை கண்டு நான் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் மேலும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு (அமைச்சர்கள்) பெருமக்களை பங்குபெற அழைப்பதற்காக தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் உதவியுடன் பெரும் முயற்சி செய்கிறேன் எனவும் நமது நகரில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலா்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் பேசினார். 

இதனைத் தொடா்ந்து திமுக நகரச்செயலாளர் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன், பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், ஆசிரியா்கள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து அமைச்சர் பெருமக்களை விழாவிற்கு அழைத்து வருவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும்
விரைவில் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும், விழா சிறப்படைய நல்லவிதமான ஆலோசனைகள் செய்து பல தகவல்களை தருவதாகவும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் பொ.சிவபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நன்கொடையாளர்கள் அனைவரும் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் நடத்துவது குறித்த தங்களின் நல் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குமாறு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஜவஹர்லால் நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.