வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட அரும்பருத்தி கிராமத்தில் உள்ள ஏரியில் அரசியல்வாதிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதோடு இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள்?. அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட அரும்பருத்தி கிராமத்தில் உள்ள ஏரியில் பல அடி ஆழம் வரை மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அரும்பருத்தி கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம், டிராக்டர்கள் மூலமாக செங்கல் சூளைக்கும். ஏரியின் முன்பு அமைந்திருக்கும் தனியார் நிறுவனமான கணேஷ் கார்ஸ் சர்வீஸ் வளாகம் அருகாமையில் தனியார் இடத்தில் ஆழமான பள்ளத்தை மூடுவதற்காக ஏரியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் மண் கொள்ளையடிக்கப்பட்டு அந்தப் பள்ளத்தில் கொட்டி வருவதைக் கண்ட அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் இது சம்பந்தமாக வட்டாட்சியருக்கும், பி.டி.ஓ அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளாதவாறு இருந்துள்ளதால் இதுகுறித்து திருவலம் வருவாய் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கமிடம். பத்திரிக்கையாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏரியில் மணல் கொள்ளை சம்பந்தமாக கேட்ட பொழுது அவர் கூறுகையில் எனக்கு யாரும் தகவல் கொடுக்கப்படவில்லை அவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டிருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது வட்டாட்சியர் என்ன கூறுகிறாரோ அதை தான் என்னால் செய்ய முடியும் நீங்கள் கூறியதெல்லாம் என்னால் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் வேண்டுமென்றால் செய்தி போட்டுக் கொள்ளுங்கள் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை மிக கர்ஜனையோடு கூறியதுடன் சார் இது சம்பந்தமாக நான் வட்டாட்சியர் மற்றும் பி.டி.ஓ அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டேன் பி.டி.ஓ அதிகாரி கூறும் பொழுது ஏரியில் வண்டல் மண் அள்ளி ஏரியின் சுற்றியுள்ள கரையினை பலப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் பேரில் (கிராமங்கள்) ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட மேல்அதிகாரி உத்தரவு வழங்கினார்கள். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் செங்கல் சூளைகளுக்கும் மற்ற இடங்களுக்கு மண் எடுக்கப்பட்டு வருவதற்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
ஏரிகளில் பல்வேறு இடத்தில் ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலமாக விதிகளை மீறி 15 அடி உயரத்திற்கு மண் அள்ளிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஏரிகளில் அள்ளப்படும் மண்ணை செங்கல் சூளை வியாபாரிகளுக்கு டிராக்டர் ஒன்றுக்கு ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. அரசின் விதிகளை கடைபிடிக்காமல் ஒரே ஒப்புகை சீட்டை (பாஸை) கொண்டு ஒரு வாரமாக முழுவதும் மண் எடுத்து கொண்டிருக்கின்றனர். மண் பாஸ் எடுத்த நாட்கள், விவசாய பயனாளிகள், எத்தனை லோடு கொண்டு செல்லப்படும் வாகனத்தின் எண் இவைகளை கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறையில் இருந்து அலுவலர்கள் முறைப்படி நியமிப்பதில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு பல அடி ஆழம் வரை மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,
கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பயன்பாட்டிற்கு மண் தருவதில்லை. மாறாக, சட்ட விரோத செங்கல் சூலைகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கனிமவள மண் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து மண் பல அடி ஆழத்தில் தோண்டி மண் கடத்துவது தொடர்வதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் விதியை கடைப்பிடிக்காமல் ராட்சத ஜேசிபி மூலம் டிராக்டர்கள் பயன்படுத்தி ஒரே பாஸை கொண்டு விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் செங்கல் சூலைகளுக்கும் தனியார் நிறுவன இடங்களுக்கு பர்த்தி கொட்டுவதற்கு விற்கப்படுவதை விவசாயிகள் பெரிதும் எதிர்த்து வருகிறோம். இதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து மணல் கொள்ளை அடிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது அரும்பருத்தி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.