மேற்படி தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்களை பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சுத்திகரிக்கப்படும் நிலையத்தில் கொடுத்து சுத்திகரிக்கப்பட வேண்டும். இந்த கழிவு நீர்களை சுத்திகரிக்கப்படும் நிலையத்திற்கு அனுப்பி சுத்தப்படுத்துவதற்கு தோல் தொழிற்சாலை முதலாளிகள் பணம் செலுத்த வேண்டும். இதனால் பல லட்சம் ரூபாய் செலவு ஏற்படுவதால் தோல் தொழிற்சாலை நடத்தும் உரிமையாளர்கள் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவு நீரோடு இரவு நேரங்களில் கலந்து விடுகின்றனர். இதனால் பேரணாம்பட்டு, ரஹ்மதாபாத் பகுதியில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் துர்நாற்றம், மூச்சுத் திணறல் போன்றவையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும், இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனை வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரை கால்வாயில் விடும் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதி மக்கள் கூறும்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் லஞ்ச லாவண்யங்கள் பெற்றுக்கொண்டு இதுபோன்ற சட்டவிரோதமாக செயல் பட்டு வரும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். என்று சமூக ஆர்வலர்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர்.