அந்த மாபெரும் மருத்துவமுகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கு பெற்று சிகிச்சை பெற்றனர், அதில் 100ற்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, .
அந்த முகாமில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகத்தில் பிரச்சனை இருப்பதை அறிந்து, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மார்பக தசை பரிசோதனை(Biopsy),Usg ,Mammogram, CT போன்ற அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அவர்களில் நான்கு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது, இணை இயக்குனர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மனநல மருத்துவர் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருதுகாப்பிடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஸ்வர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசுவாமி, ஜெரின் இவஞ்செலின், விக்னேஷ் ஷங்கர் ஆகிய மருத்துவக்குழுவினர்களால் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை (Modified Radical Mastectomy) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது அவர்கள் நால்வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட வார்டில் நலமாக உள்ளார்கள், இதை பற்றி தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கூறும்போது, இதுபோன்ற உயிர் காக்கும் உயர் அறுவை சிகிச்சைகள், தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் கூறி மருத்துவக் குழுவினரை வெகுவாக பாராட்டினார். கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின்,
கலைஞரின் நூறாவது பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமில் நான்கு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு, தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதனை நடத்தி காட்டி மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
தென்காசி மருத்துவமனையில் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகள், சிக்கலான அறுவை சிகிச்சைகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் தெரிவித்தார். இதையடுத்து தென்காசி மாவட்ட மருத்துவ தலைமை மருத்துவர் சிறப்பாக சிகிச்சை வழங்கிய அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளர், இணை இயக்குனர் அனைவரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் ஐஏஎஸ் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.