பிராந்தி, ஒயின், பீர் வகைகள்- விலை உயர்வு: மது பிரியர்கள் வேதனை?
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
இதன்படி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிராந்தி, ஒயின், பீர் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்கமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை 19.07.23 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒயின், பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் பொருந்தும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில் சென்னர் பீர் ரூ.280-ல் இருந்து ரூ.290 ஆகவும், 500 மில்லி ஜெர்மனியா பில்ஸநர் பீர் (கேன்) ரூ.250-ல் இருந்து ரூ.270 ஆகவும் 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இது தவிர 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000-ல் இருந்து ரூ.2240ஆகவும், 750 மில்லி பிபிடர் ஜின் ரூ.2220-ல் இருந்து ரூ.2460 ஆகவும் 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3030-ல் இருந்து ரூ.3270 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்சமாக 1 லிட்டர் பிளாக்ஆப் ஸ்கயா வொட்கா பாட்டிலுக்கு ரூ.320 உயர்த்தப்பட்டு ரூ.1980-ல் இருந்து ரூ.2300 ஆகவும், ஹைலன்ட் கோல் பிளன்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.320 உயர்த்தப்பட்டு ரூ.2580-ல் இருந்து ரூ.2900 வரையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இவ்வாறு மொத்தம் 18 வகையான வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் உயர்த்தி உள்ளது. இதனால் மது பிரியர்கள் கூறுகையில் டாஸ்மார்க் நிர்வாகம் சென்ற வாரம் டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் சூப்பர்வைசர்கள் சேல்ஸ்மேன்கள் பத்து ரூபாய் அதிகம் வசூலிக்க கூடாது என அவ்வாறு வசூலித்தால் பணி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவுகள் பிறப்பித்திருந்த நிலையில் தற்போது மது பாட்டில்கள் ஏற்றுமதி இறக்குமதி விலை உயர்வுக்கு எனக் கூறி மது பாட்டில்கள் மீது பத்து ரூபாய் முதல் 320 ரூபாய் வரை அதிக படி விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில் மதுப் பிரியர்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர். குதிரை ரேசுகளில் பந்தயம் கட்டி வாழ்ந்தவனும் சரி சொத்தை இழந்தவனும் சரி அது போன்று ஒன்றை விட்டு.! ஒன்றைப் பிடிக்கும்.!! நிலைதான் டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவு என மது பிரியர்கள் கூறி வருகின்றனர். எது எப்படியோ ஆனால் நாங்கள் மட்டும் உடம்பு அலுப்பிற்கு மது அருந்தித்தான் தீர வேண்டும்.