வேலூர் கோட்டத்தில் நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு ஒதுக்கீடு செய்யப்படுமா?
வேலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பெற சிறப்பு முகாம்
வேலூரில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. வேலூர் முத்து மண்டபம் டோபிகானா பகுதி கன்னிகாபுரம், தொரப்பாடி, கரிகிரி, பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா, ஆகிய இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் அரங்கத்தில் நடந்தது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வீடுகள் கேட்டு விண்ணப்பித்தனர். அதிகளவில் கூட்டம் இருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வழங்கி சென்றனர். 

தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் பயன் பெற பயனாளிகளுக்கு ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் இந்தியாவில் வேறு எங்கும் சொந்தமாக நிலமும் வீடும் இருக்கக்கூடாது.

பயனாளிகளின் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும். குடியிருப்போர் நல சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதம் ரூ.250 பராமரிப்பு தொகை செலுத்த வேண்டும் ஆகியவை விண்ணப்பிக்க தகுதிகளாகும்.

விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் ஒப்படைக்க கோரி இருந்தனர். இதில் 
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற வாரம் திறந்து வைத்தார். மேலும், 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள், 5,430 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் 518 பயனாளிகளுக்கு அடுக்குமாடி மற்றும் மனைகளுக்கான உரிமை ஆவணங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம். தொரப்பாடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.17.41 கோடி செலவில் 160 அடுக்குமாடி குடியிருப்புகள், இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.23.16 கோடி ரூபாய் செலவில் 264 குடியிருப்புகள்; என மொத்தம் ரூ.284.32 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ.1225.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 12,495 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடியிருப்புகள் தலா 400 சதுரஅடி பரப்பில், ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிப்பறையுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், அனைத்துக் குடியிருப்பு வளாகங்களும் சாலை, குடிநீர், கழிவு நீரேற்றம், சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன மேலும் இந்த குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வது பயனாளிகளின் முன்னுரிமை ஆகும் முறையில் தேர்வு செய்யப்பட்டு வீடு ஒதுக்கீடு வழங்கப்படும் இதற்கென அரசு நிர்ணயித்த தொகை ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தவணை முறையிலும் அல்லது மானியம் மூலமாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புறங்களில் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது புரோக்கர்கள் மூலமாக தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம். காட்பாடி கோபாலபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வேலூர் கோட்டம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணி ஆற்றிவரும் சிலர் புரோக்கர்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு உண்மையான ஏழை குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய வீடு ஒதுக்கீடு கிடைக்க விடமால் புரோக்கர்கள் தாங்கள் லஞ்சபணம் வாங்கி கொண்டு தகுதியற்ற பயனாளிகளின் அனைத்து குடும்ப தகவல்களை பெற்று அவர்களின் பெயர்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாரிய அலுவலக பணியாளர்கள் மூலமாக வீடு ஓதுக்கீடுகளை பெற்று கொடுத்து அதிகமாக பணம் சம்பாதிக்கும் நிலை வேலூர் கோட்டம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் ஒவ்வொரு மனுதாரர் இடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வாருங்கள் உங்கள் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என்று கூறி பயனாளிகளிடம் கணிசமாக ஒரு தொகையை வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் செல்வக்குமாரின் கீழ் பல்வேறு புரோக்கர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஊழல் தில்லுமுல்லுக்களில் ஈடுபட்டு வருவதாகவும். இதில் உண்மையான ஏழை குடும்பகளுக்கு வீடு கிடைக்காத நிலை உள்ளது. ஆகையால் இது போன்ற நிலையை மாற்றிட தமிழக வீட்டு வசதி மற்றும் நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள் வேலூர் கோட்டம் அலுவலகத்தில் நிர்வாகப் பொறியாளரிடம் விசாரணை செய்து அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களையும் விசாரணை செய்து முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் ஓதுக்கீடு பெற்ற அனைத்து பயனாளிகளின் தகுதி விபரங்களை சரிபார்த்து முறைகேடாக புரோக்கர்கள் மூலம் லஞ்சபணம் கொடுத்து ஓதுக்கீடு பெற்றவர்களின் ஓதுக்கீட்டை ரத்து செய்து உண்மையான தகுதி வாய்ந்த ஏழை குடும்பங்களுக்கு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீட்டு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே ஏழைகளின் எதிர்பார்ப்பு என சமூக ஆர்வலர்களும் ஏழை எளிய மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நடக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.?