திருவாரூர் மாவட்டம். குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் கூடுதலாக முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சரியாக பணியாற்றவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தஞ்சை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் மாதவன் பரிந்துரையின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஷ்ரீ அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளார்.